» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு : தலிபான்கள் நிராகரிப்பு!

சனி 30, நவம்பர் 2019 12:30:49 PM (IST)

அமெரிக்கா மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கவுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பை ஏற்க முடியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் ஆப்கன் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கடந்த 18 ஆண்டுகளாக போரிட்டு வருகின்றன. இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலிபான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். 

இந்நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் தாங்க்ஸ்கிவிங் (Thanksgiving) தினத்தை வீரர்களுடன் கொண்டாடும் நோக்கில் அதிபர் டிரம்ப் நேற்று ஆப்கன் வந்தடைந்தார். இது அதிபர் டிரம்பின் முதல் ஆப்கன் பயணமாகும். ஆப்கனில் உள்ள பாக்ரம் விமானப் படைத்தளத்தில் வீரர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப் பின்னர் அங்கு செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அமெரிக்க அரசு தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என டிரம்ப் பதிலளித்தார்.தலிபான்கள் எங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே அவர்களை நாங்கள் சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின் போது அவர்கள் போர் நிறுத்தத்தை கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 

அதேசமயம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து பதிலளிக்க அதிபர் டிரம்ப் மறுத்துவிட்டார். அமைதி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை தலிபான்கள் மறுத்துள்ளனர். அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை துவக்குவது தொடர்பாக தற்போது முடிவெடுக்க முடியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலிபான் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவது குறித்து ஆலோசிப்பதற்கு இது உகந்த நேரம் அல்ல. இது தொடர்பாக தலிபான் அமைப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும்’’ என ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory