» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா

புதன் 20, நவம்பர் 2019 4:01:18 PM (IST)

இலங்கை பிரதமர் பதவியை  ரணில் விக்ரமசிங்கே இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் 8-ஆவது அதிபராக, சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் தம்பியுமான கோத்தபய ராஜபட்ச நவ.18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா். இதையடுத்து மார்ச் 1, 2020 வரையிலான குறுகிய காலகட்டத்துக்கான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கவுள்ளது. இதில் தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவி வழங்க அதிபர் கோத்தபய ராஜபட்ச முடிவு செய்துள்ளார்.

அத்துடன் நாட்டின் பிரதமர் பதவியை தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவுக்கு வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்ப தற்போதைய பிரதமர் ரணில் விகிரமசிங்கேவை ராஜினாமா செய்யுமாறு கோத்தபய கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியை  ரணில் விக்ரமசிங்கே புதனன்று ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை அவர் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory