» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி

ஞாயிறு 17, நவம்பர் 2019 6:53:23 PM (IST)இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்னர். நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் முடிவடைந்தது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், அந்நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீதம் (69 லட்சத்து 24 ஆயிரத்து 255) வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆளும்கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 41.99 சதவீதம் (55 லட்சத்து 64 ஆயிரத்து 239) வாக்குகளை பெற்றார்.இதர வேட்பாளர்கள் அனைவரும் மொத்தமாக 5.76 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர் என  இலங்கை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாசா, ராஜினாமா 

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory