» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றது : 81.52% வாக்குகள் பதிவு

சனி 16, நவம்பர் 2019 8:24:02 PM (IST)

இலங்கையில் 8வது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 81.52% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் 8வது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்து முடிந்துள்ளது.முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்ச, சஜித் பிரேமதாசா ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 35 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் இவர்களுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இலங்கையையே உலுக்கிய ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தோ்தல், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு தோ்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிபா் மைத்ரிபால சிறீசேனா, இந்தத் தோ்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியே ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபட்சவுக்கு (70) அவா் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளாா்.இந்தத் தோ்தலில், சாதனை அளவாக 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory