» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நவாஸ் ஷெரீஃப்புக்கு சிறையில் விஷம் கலந்த உணவு: மகன் பகீர் குற்றச்சாட்டு

புதன் 23, அக்டோபர் 2019 3:15:00 PM (IST)

நவாஸ் ஷெரிப்புக்கு சிறையில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாக அவரது மகன் உசேன் ஷெரீஃப் குற்றம்சாட்டியுள்ளார். 

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நவாஸ் ஷெரிப்புக்கு சிறையில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாக அவரது மகன் உசேன் ஷெரீஃப் குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நவாஸ் ஷெரீஃப்பின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16 ஆயிரமாகக் குறைந்திருப்பதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை அவரை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பனாமா ஆவண முறைகேடு வழக்கில் நவாஸ் ஷெரீஃப்புக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டதால், அவர் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory