» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் கிரே லிஸ்டில் இருந்து இலங்கை நீக்கம்

ஞாயிறு 20, அக்டோபர் 2019 9:38:58 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகிய சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) கிரே லிஸ்டில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி அமைப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 1989ம் ஆண்டு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழு துவங்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை கிரே பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்துவோம் என நிதி நடவடிக்கை பணிக் குழு அறிவித்தது.

கடந்த 2017ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த கூட்டத்தில் இலங்கை அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும் கிரே பட்டியலில் இலங்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ் நகரில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளில் இலங்கையை கிரே லிஸ்டில் இருந்து நீக்க எஃப்.ஏ.டி.எஃப் முடிவு செய்தது. நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவி ஆகிய குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் சர்வதேச நிதி நடவடிக்கை குழு முன்பு சுட்டிக்காட்டிய குறைப்பாடுகளை இலங்கை அரசு சரி செய்து வருவதாக எஃப்.ஏ.டி.எஃப் பாராட்டியதாக இலங்கையின் கசாட்டா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory