» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதை சரிபார்த்த பெண்கள் குழு: நாசா புதிய சாதனை

சனி 19, அக்டோபர் 2019 10:43:00 AM (IST)சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்சிகா மேர் என்ற இரு விண்வெளி வீராங்கனைகள் விண்வெளியில் நடந்து சென்று சரிபார்த்தனர். இதன் மூலம் ஆண் துணையின்றி விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் குழு என்ற சாதனையை படைத்துள்ளனர். உலக விண்வெளி வரலாற்றில் இந்த புதிய சாதனை முயற்சியை நாசா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 

கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்சிகா மேர் இருவரும் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி விண்வெளியில் மிதந்தப்படியே பழுதடைந்த மின்சார பாட்டரி சார்ஜ் அமைப்பை சரிசெய்தனர். சூரிய ஒளி இல்லாத நேரத்தில் இந்த பாட்டரி சார்ஜ் அமைப்பின் உதவியோடு தான் விண்வெளி நிலையம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே மேற்கொண்ட முதல் விண்வெளி நடைபயணம் என்ற புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக நாசா பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் வீராங்கனை கேத்தி சல்லிவான் இந்தச் சாதனையைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். நாசா விஞ்ஞானிகள், அமெரிக்க தலைவர்கள் பலர் சாதனை படைத்துள்ள கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்சிகா மேரை பாராட்டியுள்ளனர். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விண்வெளித்துறையில் இது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில், சகஜமானதாகிவிடும் என்று பலர் தெரிவித்துள்ளனர். இந்த புதிய சாதனையை கடந்த மார்ச் மாதம் நடத்துவதற்கு நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது விண்வெளியில் நடைபயணத்திற்காக பெண்கள் அணியும் அங்கி ஒன்று மட்டுமே இருந்தது. அதனால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து

thamilanOct 22, 2019 - 11:49:23 AM | Posted IP 173.2*****

vaalthukal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory