» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

புதன் 16, அக்டோபர் 2019 12:18:57 PM (IST)

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக குறைத்தது சர்வதேச நாணய நிதியம் குறைத்து கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப், 2019-20 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும் என்று கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்த நிலையில், தற்போது 1.2 சதவீதம் குறைத்துள்ளது. கடந்த 2018-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக இருந்து கவனிக்கத்தக்கது. வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் வேகமான பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா தக்க வைத்துள்ளது.

கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற திட்டங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும் பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. சீனாவை பொருத்தவரை, 2018-ல், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5.8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் பன்னாட்டு நிதியம்தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory