» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபா் தோ்தல் : கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசேனா கட்சி ஆதரவு

வியாழன் 10, அக்டோபர் 2019 12:31:02 PM (IST)

இலங்கை அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவுக்கு தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது. எனினும், தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதையடுத்து, அதிபா் தோ்தலில் அவா் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடாதது உறுதியானது. அத்துடன், அந்தத் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தவருமான கோத்தபய ராஜபட்சவுக்கு ஆதரவளிக்க சிறீசேனா திட்டமிட்டுள்ளாா் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதனை உறுதி செய்யும் வகையில், அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளா் தயசிறீ ஜெயசேகரா செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தாா். தோ்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடா்பாக மகிந்த ராஜபட்சவின் இலங்கை பொதுஜன பெரமுணா கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியாததால் இலங்கை சுதந்திரக் கட்சி இந்த முடிவுக்கு வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கடந்த 2006 முதல் 2009-ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுடனான இறுதிகட்டப் போரை பாதுகாப்புச் செயலா் என்ற முறையில் கோத்தபய ராஜபட்ச முன்னின்று நடத்தினாா். இதன் காரணமாக, அவருக்கு பெரும்பான்மை சிங்களா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவுக்கு அதிபா் சிறீசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory