» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் கச்சா எண்ணெய் விநியோக ஒப்பந்தங்கள் தொடரும் - சவூதி அரேபியா உறுதி

புதன் 18, செப்டம்பர் 2019 5:51:05 PM (IST)

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்த போதிலும் இந்தியாவின் விநியோக ஒப்பந்தங்களை மதிக்கப்போவதாக சவுதி அரம்கோ உறுதியளித்திருந்தது.

சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை மீது ஆள் இல்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று லிட்டருக்கு 24-25 பைசா உயர்ந்துள்ளது. அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்கும் விலை தகவல்களின்படி டெல்லி சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 பைசா அதிகரித்து 72.42 ஆகவும், டீசல் 24 பைசா அதிகரித்து 65.82 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது ஒரு தேசிய அளவுகோலாகும்.

எரிபொருட்களின் கலால் வரி அதிகரித்ததன் காரணமாக ஜூலை 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு இது ஒரு பெரிய உயர்வு ஆகும். நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 15 பைசா உயர்ந்தது. சனிக்கிழமையன்று ஆளில்லா விமான தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் உற்பத்தியை பாதியாகக் குறைத்தன. இதனால் சர்வதேச எண்ணெய் விலைகள் திங்களன்று கிட்டத்தட்ட 20% உயர்ந்தன. புதன்கிழமை ப்ரெண்ட் கச்சா பீப்பாய்க்கு 0.26% குறைந்து 64.38 டாலராக இருந்தது. யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (டபிள்யூ.டி.ஐ) கச்சா பீப்பாய்க்கு 0.5% இழந்து 59.06 டாலராக இருந்தது.

சவூதி அரேபியா கச்சா எண்ணெய் ஆலையில் உற்பத்தியை விரைவாக தொடங்கியதை அடுத்து சந்தியில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைய தொடங்கியது.சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் நாடு முழுமையாக மீட்கப்படும் என்று கூறியுள்ளார். உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, வளர்ந்து வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தெரிவித்தார்.

இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 83% இறக்குமதி செய்கிறது, இதில் ஐந்தில் ஒரு பகுதியை சவுதி அரேபியா வழங்குகிறது. ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியா அதன் இரண்டாவது பெரிய சப்ளையர் ஆகும். சவுதி அரேபியா 2018-19 நிதியாண்டில் 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்றது,. தற்போது நாடு 207.3 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது.சவுதி அரம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் கூறும் போது அப்கைக் மற்றும் குரைசில் உள்ள அதன் ஆலைகள் மீதான பயங்கரவாத தாக்குதல்களால் நிறுத்தப்பட்ட உற்பத்தி செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக மீட்டமைக்கப்படும் என் கூறினார். உற்பத்தி குறைந்த போதிலும் இந்தியாவின் விநியோக ஒப்பந்தங்களை மதிக்கப்போவதாக சவுதி அரம்கோ உறுதியளித்திருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Black Forest Cakes
Thoothukudi Business Directory