» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட வேண்டும் ஐ.நா விருப்பம்

புதன் 11, செப்டம்பர் 2019 8:26:20 PM (IST)

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் நிலைப்பாடு குறித்து பேசிய அவர், "பொதுவாகவும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி, அவருடைய தகவல் அனைவருக்கும் பொதுவானதுதான். இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல், அவருக்கு தொடர்ந்து கவலையளித்து வருகிறது. 

இந்த விவகாரத்தை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார் என்றார்.ஐ.நா. பொதுக்கூட்டம் இந்த மாதம் கடைசியில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தின்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இருநாட்டு தலைவர்கள் மத்தியில் ஐ.நா. பொதுச்செயலாளர் மத்தியஸ்தம் செய்வாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், பொதுவாக மத்தியஸ்தம் என்பதில் ஐ.நா.வுக்கு என்று ஒரு கொள்கை நடைமுறை உள்ளது. அதில் இதுவரை எந்தவித மாற்றமும் கிடையாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்ததுபோல் மக்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் காஷ்மீரில் நிலவும் சூழலுக்கு தீர்வு காண முடியும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesCSC Computer Education

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory