» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் : ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி

புதன் 4, செப்டம்பர் 2019 1:38:12 PM (IST)

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.  விமானம் மூலம் அந்நாட்டின் விலாடிவோஸ்டோக் சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடிக்கு ரஷ்ய வீரர்கள் ராணுவ மரியாதை அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடியை, ரஷ்யாவில் வாழும் இந்திய வம்சா வளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்காக இருவரும் கப்பலில் ஒன்றாக பயணித்தனர். அப்போது கப்பல் கட்டும் தொழிலில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். 

பின்னர் வெஸ்டா கப்பல் கட்டும் தளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்பங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை காலை இந்திய - ரஷ்ய உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பின்னர் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education



Thoothukudi Business Directory