» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பள்ளியில் புகுந்து 8 மாணவர்களை குத்திக் கொன்ற கொடூரம்: சீனாவில் பயங்கரம்!!

செவ்வாய் 3, செப்டம்பர் 2019 5:17:45 PM (IST)

சீனாவில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பள்ளி மாணவர்களை கொடூர ஆசாமி குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள என்ஷி நகரத்தில் கெயாங்போ ஆரம்பப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செவ்வாயன்றுதான் வகுப்புகள் துவங்குகிறது. இந்நிலையில் கெயாங்போ பள்ளி திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பள்ளி மாணவர்களை வெறியன் ஒருவன் குத்திக் கொன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40 வயதுடைய யு என்ற அந்த கொடூரன் பள்ளியில் புகுந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாகக் குத்தியுள்ளான். 

இதில் 8 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபத்தால் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவன், ஏற்கனவே தனது காதலியின் கண்ணை கத்தியால் நோண்டிக் கொல்ல முயன்ற குற்றத்திற்காக, 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சீனாவில் பலத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory