» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீரில் படுகொலை நடப்பதற்கான ஆதாரம் இல்லை : ‍ பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு

செவ்வாய் 3, செப்டம்பர் 2019 5:06:46 PM (IST)

காஷ்மீரில் படுகொலை நடப்பதாகக் குற்றம்சாட்டும் பாகிஸ்தானிடம் இந்தியாவுக்கு எதிராக போதிய ஆதாரமில்லை என்று சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வந்து இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று தீவிரமாக இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்த தகவல் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கான பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறுகையில், காஷ்மீரில் இந்தியா படுகொலையில் ஈடுபடுவதாகக் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கொண்டு வந்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்காது என்றும் குரேஷி தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்றி, அதனை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப் போவதாக சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கான வழக்கறிஞரின் பேச்சு இம்ரான் கானுக்கு பலத்த அடியாகவே கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory