» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது : மன்னர் சல்மான் வழங்கினார்

சனி 24, ஆகஸ்ட் 2019 5:38:27 PM (IST)



பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருதினை மன்னர் சல்மான் வழங்கினார்.

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்திற்கு நேற்று சென்றார். அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை  பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள், சர்வதேச நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து,  ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  அபுதாபி பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி பக்ரைன் செல்ல உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory