» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் என்பது வதந்தி; மோடி அரசின் தந்திரம்: இம்ரான் கான்

சனி 24, ஆகஸ்ட் 2019 10:36:13 AM (IST)

தென் இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் என்பது வதந்தி, மக்களை திசை திருப்ப மோடி அரசின் தந்திரம் என பாக். பிரதமர்  இம்ரான் கான் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு 370 வது சட்டப் பிரிவில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு செய்ததிலிருந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது இந்தியாதான், தீவிரவாதிகள் பெயரை சொல்லி, பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் குமுறியுள்ளார். இம்ரான்கான் இன்று மதியம் வெளியிட்ட சில ட்வீட்டுகள், தற்போது இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பானதாக உள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதாக காவல்துறையும் உறுதி செய்துள்ளது. துதொடர்பாக இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவின் தெற்கு பிராந்தியங்களுக்குள் நுழைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இந்த செய்திகள் இந்தியாவின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை திட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரம்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும், மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் இந்தியத் தலைமை ஒரு தவறான நடவடிக்கைக்கு முயற்சிக்கும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் இந்தியா பற்றி இவ்வாறு எச்சரிக்கைவிடுப்பதாக கருத்து கூறுவது இது முதல் முறை கிடையாது. பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாமை இந்தியா தாக்கிய பிறகு, மீண்டும், தேர்தலுக்கு முன்பாக அப்படி ஒரு தாக்குதலை இந்தியா நடத்தும். தேர்தல் மைலேஜ் கிடைக்க மோடி விரும்புவார் என இம்ரான்கான் தெரிவித்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, வெளியாகியுள்ள எச்சரிக்கையை, போலியான செய்தி என இப்போது இம்ரான்கான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து ஹேசியம் கூறுவது இம்ரான்கானின் வழக்கமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

நிஹாAug 24, 2019 - 05:45:16 PM | Posted IP 162.1*****

தென்னிந்தியாவில் நகர்ப்புற நக்சல்கள் நிறைய உள்ளோம் ...அது தெரியாதா உங்களுக்கு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory