» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ரோபோ: முதல் முறையாக அனுப்பியது ரஷியா!!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 11:11:11 AM (IST)ரஷியாவை சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ரோபோ ஒன்றை தயாரித்து உள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய இந்த ரோபோவுக்கு பெடோர் என பெயரிட்டுள்ளது. 5 அடி 11 அங்குலம் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப ரஷியா முடிவு செய்தது. அதன்படி கஜகஸ்தானில் உள்ள ரஷியாவுக்கு சொந்தமான பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பெடோர் ரோபோ உடன் சோயூஸ் ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த ரோபோ நாளை (சனிக்கிழமை) சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அங்கு பெடோர் ரோபோ மின்சார கேபிள்களை இணைத்தல் மற்றும் துண்டித்தல், தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்துதல் போன்ற மீட்பு பணிகளுக்கான புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும்” என்று ரஷிய விண்வெளி நிறுவனத்தின் வருங்கால திட்டங்கள் மற்றும் அறிவியலுக்கான இயக்குனர் அலெக்சாண்டர் புளோஷென்கோ கூறினார். விண்வெளிக்கு ரஷியா ரோபோவை அனுப்பவது இதுவே முதல் முறை ஆகும். எனினும் பெடோர் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் ரோபோ அல்ல.

அதிக ஆபத்து நிறைந்த சூழலில் பணிபுரியும் நோக்கத்துடன் அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு ஒரு ரோபோவை விண்வெளிக்கு அனுப்பியது.தொழில்நுட்ப சிக்கல்களால் பாதிக்கப்பட்ட அந்த ரோபோ கடந்த ஆண்டு மீண்டும் பூமிக்கு திரும்பியது. அதேபோல் ஜப்பானும் கடந்த 2013-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஒரு ரோபோவை அனுப்பியது நினைவுகூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory