» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எலும்பும், தோலுமாக டிக்கிரி யானை: உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய புகைப்படம்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 5:54:41 PM (IST)



சேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு வெளியிட்ட "எலும்பும் தோளுமாக உள்ள டிக்கிரி" யானையின் புகைப்படம் உலகை அதிரவைத்துள்ளது.

இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டுதோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று இரவுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்றனர்.திருவிழாவில் கலந்து கொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று. இந்த டிக்கிரியின் புகைப்படத்தை சேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் யானை எலும்பும், தோலுமாக உள்ளது. இந்த யானையின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தனர்.

இந்த டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் அறக்கட்டளை, "டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. டிக்கிரியின் புகைப்படம் பலரின் நெஞ்சத்தை நொறுக்கியுள்ளது.


மக்கள் கருத்து

ஏ கண்ணன்Aug 19, 2019 - 04:50:19 PM | Posted IP 108.1*****

ஐந்து அறிவுஜீவிகள் அப்படிதான் இருப்பார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory