» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நமக்கு கவுரம் தான் மிக முக்கியம்; போரை கண்டு அஞ்சக்கூடாது: பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!

வியாழன் 8, ஆகஸ்ட் 2019 8:26:44 AM (IST)

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா உடனான தூதரக உறவை ஏன் துண்டிக்கவில்லை? என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ‘‘ஏன் இந்திய தூதர் இன்னும் பாகிஸ்தானில் இருக்கிறார் ? நாம் ஏன் இன்னும் இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிக்காமல் இருக்கிறோம்? இருநாடுகள் இடையே தூதரக உறவு இல்லாத நிலையில் நம்முடைய தூதர் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’’ என பல கேள்விகளை எழுப்பினார்.

‘‘பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவர் ஒரு ஃபாசிச அரசின் பிரதிநிதியாக உள்ளார். காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்க கூடாது’’ ‘மற்ற விஷயங்களை விட நமக்கு கவுரம் தான் மிக முக்கியம். போரா அல்லது அவமானமா ? இந்த இரண்டுக்கும் இடையே ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். கவுரத்திற்காக தான் போர்கள் நடத்தப்படுகின்றன. வெற்றிக்காகவோ தோல்விக்காகவோ அல்ல. எனவே நாம் போரை கண்டு அஞ்சக்கூடாது’’ என்று அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார்.

முன்னதாக ஃபவாத் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசிய போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என கூறினார். அமைச்சர் ஃபவாத் சவுத்ரி போல் பல பாகிஸ்தான் தலைவர்களும் இந்தியாவுடனான தூதரக உறவை ரத்து செய்யும்படி பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

உண்மைதான்Aug 8, 2019 - 11:24:29 AM | Posted IP 162.1*****

பாகிஸ்தான் மதவாதி அமைச்சர் நாயே.. 3 பொண்டாட்டிக்கார இம்ரான் கான் நாயே , 8 பொண்டாட்டிக்கார ஒசாமா பின்லேடன் நாயை ஊருக்குளே பாதுகாத்து வைத்திருந்த பண்ணியே , தீவிரவாத நாடு பால்ஸ்தீனே பற்றி காஸ்மீரை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்... உன் மதவெறிபிடித்த நாயால் எல்லா இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதிகள் பெருகி கொண்டே இருக்கிறது... போர் வந்தால் அமெரிக்காவுடன் , அதன் நட்பு நாடுகள் சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தை அழித்து விட காலம் வரும். பக்கத்தில நாடு குர்திஸ்தான் நாடும் பாகிஸ்தானை அழிக்க காத்திருக்கும்..

samiAug 8, 2019 - 10:28:51 AM | Posted IP 162.1*****

அங்கேயும் ஒரு வைகோ

நிஹாAug 8, 2019 - 09:27:43 AM | Posted IP 162.1*****

கவுரவம் முக்கியம் அமைச்சரே!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu CommunicationsCSC Computer EducationThoothukudi Business Directory