» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள்: கியூரியாசிட்டி ரோவர் ஆய்வில் தகவல்

புதன் 7, ஆகஸ்ட் 2019 5:32:02 PM (IST)கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் பண்டைகாலத்தில் நீரோடைகள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதியில் களிமண் தாதுக்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்கிறது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்  கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது, அதன் பின்னர், அது ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பி உள்ளது, 13 மைல்கள் சுற்றித் திரிந்து 1,207 அடி  உயரம் ஏறி அது தற்போது ஷார்ப் மவுண்டின் பக்கவாட்டில் உள்ளது. இது கேல் பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ளது, அங்கு ஒரு காலத்தில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் மற்றும் ஏரிகள்  இருந்து உள்ளன.

கேல் கேட்டர் ஒரு பரந்த மற்றும் வறண்ட பண்டைய ஏரி படுக்கையாகும், அதன் மையத்தில் 16,404 அடி உயரமுள்ள மலை உள்ளது. மவுண்ட் ஷார்ப் சிகரம் பள்ளத்தின் விளிம்பை விட உயரமாக உள்ளது.கியூரியாசிட்டி அந்த பகுதியில் களிமண் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு  எடுத்து உள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வாளர்  கிறிஸ்டன் பென்னட் கூறுகையில், "நாங்கள் 10 ஆண்டுகளாக இந்த பகுதியின் சுற்றுப்பாதை படங்களை ஆய்வுச் செய்து வருகிறோம், இறுதியாக நாங்கள் தற்போது இதனை நெருக்கமாகப் பார்க்க முடிகிறது என கூறினார்.கியூரியாசிட்டி தனது பணியின் போது, ஷார்ப் மலையில் அதிக அளவு களிமண் தாதுக்களை ஆய்வு செய்தது. கியூரியாசிட்டி செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரால் இந்த தாதுக்கள் முதலில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன.

சமீபத்தில், ரோவரின் கேமரா டீல் ரிட்ஜ் வெளிப்புறம் மற்றும் ஸ்ட்ராத்டன் ஆகியவற்றின் பனோரமாவைப் படம் பிடித்தது, இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது, இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டு இருக்கலாம். "இந்த பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்" என்று கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் களிமண் ஆய்வு  இணைத் தலைவரான வலேரி ஃபாக்ஸ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory