» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா, தென் கொரியாவை எச்சரிக்கவே ஏவுகணைச் சோதனை - வட கொரிய அதிபர்

புதன் 7, ஆகஸ்ட் 2019 4:56:23 PM (IST)

அமெரிக்கா, தென் கொரியாவை எச்சரிக்கவே அண்மையில் தாங்கள் ஏவுகணைச் சோதனை நடத்தியதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். 

அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாட்டு ராணுவங்கள் இடையேயான கூட்டுப் பயிற்சி திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இதைக் கண்டித்துள்ள வடகொரியா, ஒப்பந்தத்தை மீறும் வகையில் அந்த இரு நாடுகளும் செயல்படுவதாக எச்சரித்தது. ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை புதிய ரக ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. தெற்கு வாங்கே  மாகாணத்தில் இருந்து, இரு ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.

இரு வாரத்தில் அந்த நாடு நடத்திய நான்கு ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தை மீண்டும் பதற்றம் சூழ்ந்து கொண்டுள்ளது.  இந்த நிலையில், ஏவுகணைச் சோதனை குறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எச்சரிப்பதற்கான சந்தர்ப்பம் என்று கூறி இருப்பதாக வடகொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory