» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: பாகிஸ்தான் கடும் கண்டனம்

திங்கள் 5, ஆகஸ்ட் 2019 10:06:20 PM (IST)

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்குரிய பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அரசால் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் படி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தில் எந்தவித மாற்றங்களையும் இந்தியா கொண்டு வர முடியாது. இதை ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது, இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் பாகிஸ்தான் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேஷி அரசியலமைப்பு பிரிவு 35 ஏவை ரத்து செய்ததன் மூலம் இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் உயிர்ப்பித்து விட்டது காஷ்மீர் தலைவர்களுக்கும் இந்திய அரசின் இந்த முடிவில் விருப்பம் இல்லை இந்த நடவடிக்கையால் இந்திய அரசு அதன் உண்மையான ஜனநாயக முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது என ஷா மெஹ்முத் குரேஷி சாடினார்.


மக்கள் கருத்து

சாமிAug 17, 2019 - 06:31:14 PM | Posted IP 108.1*****

உன்னோடு சேர்த்து எங்க சுடலை - சின்னப்பையன் சிதம்பரம் - மற்றும் சிலர் - இருக்கிறார்கள் - அவர்களை அங்கேயே கூட்டிப்போய்விடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsThoothukudi Business Directory