» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி: அதிபர் டிரம்ப் கண்டனம்

ஞாயிறு 4, ஆகஸ்ட் 2019 5:31:40 PM (IST)



அமெரிக்காவின் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். அப்போது ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர். மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு துயரமானது. இது மிகவும் கோழைத்தனமான செயல் என பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications






Thoothukudi Business Directory