» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!!

வெள்ளி 2, ஆகஸ்ட் 2019 10:41:07 AM (IST)

பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் சிறந்த மனிதர்கள். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களுடனும் பேசியுள்ளேன். இருவரும் இதில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காஷ்மீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அமெரிக்காவும் விரும்புகிறது. எனவே இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, வாஷிங்டனில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டின்போது, நானும் பிரதமர் மோடியும் சந்தித்துக் கொண்டோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறீர்களா? என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டிருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன. இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார்.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பாகிஸ்தான் எதிர்பார்த்ததைவிட மேலான நிகழ்வு என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications


CSC Computer Education


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory