» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபாய் மன்னருடன் கட்டாயத் திருமணம்: பாதுகாப்பு கோரி 6-வது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு

வியாழன் 1, ஆகஸ்ட் 2019 11:36:36 AM (IST)துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும் தனக்கும் கட்டாய திருமணம் நடந்துள்ளதாக இளவரசி ஹயா லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6-வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார். இந்நிலையில் தனக்கு கட்டாய திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும், பாதுகாப்பு கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான பகுதியளவு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு நீதிபதி அனுமதியளித்தார். அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.


மக்கள் கருத்து

அப்படியாAug 1, 2019 - 02:09:44 PM | Posted IP 108.1*****

அந்த நாட்டில் அடுத்தவங்க பெண்களை தொட்டால் தண்டனை அல்லது கசையடி வழங்கப்படும் , ஆனால் அனுமதி இன்றி தொடலாம் (அதான் அடுத்தவங்க பெண்களை கல்யாணம் பண்ணலாம்) .. நிறைய பெண்களை மணமுடிப்பது விபச்சாரம் போன்றதாகும் ..இது என்ன கலாசாரம் ???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory