» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் மரணம் அமெரிக்கா தகவல்

வியாழன் 1, ஆகஸ்ட் 2019 11:12:34 AM (IST)

ஒசமா பின்லேடன் மகன் ஹம்சா உயிரிழந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. செப்டெம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது ஹம்சா சிறுவனாக இருந்தார். அந்தத் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமாவின் அருகில் அவர் இருந்ததாக அந்த அல்-கய்தா கூறுகிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Thoothukudi Business Directory