» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா உணவு திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி; 15 பேர் காயம்

செவ்வாய் 30, ஜூலை 2019 8:51:10 AM (IST)அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்ற உணவுத் திருவிழா ஒன்றில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் உள்ள கில்ராய் நகரில் கார்லிக் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் ஆண்டுதோறும் உணவு திருவிழா கொண்டாடப்படுகிறது. இது அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவ்வகையில் இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு இறுதி நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் திரு விழாவில் கலந்து கொண்டுருப்பார்கள் என மதிப்பிடப்பட்டது. இறுதிநாளான நேற்று அங்கு வந்திருந்த ஏராளமான மக்கள் வழக்கம் போல் உணவுக்கூடங்களில் சாப்பிட்டுக் கொண்டும், பொழுதுபோக்கு அம்சங்களைப் ரசித்துக்கொண்டும் இருந்தனர்.

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேர் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் பகுதியின் பின் புறத்தில் உள்ள இரும்புக் கம்பி வேலிகளை வெட்டிவிட்டு உணவுத் திருவிழா கூட்டத்திற்குள் நுழைந்தனர். கூட்டத்தில் நுழைந்த ஒருவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். துப்பாக்கியால் மக்களைச் சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவுத் திருவிழா பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்ட ஆசாமி மீது சுட்டனர், அந்த ஆசாமி அந்த இட்த்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். அவருடன் வந்த இன்னொரு ஆசாமி கூட்டத்துக்குள் புகுந்து மறைந்தார். போலீசார் அந்த மர்ம ஆசாமியைத் தேடி வருகிறார்கள். துப்பாக்கியால் சுடப்பட்ட சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக சான் ஜோஸ் நகர போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory