» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு

வெள்ளி 19, ஜூலை 2019 12:45:25 PM (IST)

குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யவும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டனர்.  இந்த தீர்ப்பை சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகமது யூசுப் வாசித்தார். 

16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர், பாகிஸ்தான் நீதிபதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும்.  குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுகவும் தொடர்புகொள்ளவு, அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள், குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழன் இரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன் பிறகு குல்பூஷண் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. சர்வதே நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்புக்கு பிறகு, ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory