» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு நெருக்கடி எதிரொலி : பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கைது!!
புதன் 17, ஜூலை 2019 3:43:22 PM (IST)
சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு நெருக்கடி எதிரொலியாக பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. அதன்பின்னர் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புகள் தொடர்பான வழக்குகளை பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கு விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து குர்ஜன்வாலாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது சயீத்தை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்துள்ள நிலையில் தற்போது ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:28:15 PM (IST)

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)
