» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் அரசு சிக்கன நடவடிக்கை: அமெரிக்காவில் தூதர் இல்லத்தில் தங்க இம்ரான் கான் முடிவு

செவ்வாய் 9, ஜூலை 2019 10:32:19 AM (IST)

பாகிஸ்தான் அரசின் சிக்கன நடவடிக்கையாக அமெரிக்கா செல்லும் இம்ரான் கான் அங்குள்ள தூதர் இல்லத்தில் தங்க முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வருகிற ஜூலை 21ம்தேதி அமெரிக்கா செல்கிறார்.  வழக்கமாக பிரதமர்கள் செல்லும் போது பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட ஓட்டலில் தங்குவார்கள்.ஆனால், தற்போது பயணம் மேற்கொள்ள உள்ள இம்ரான் கான் தங்களுடைய நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்க இருக்கிறார். பாகிஸ்தானை நிதி நெருக்கடியில் இருந்து காக்க இம்ரான் கான் உலக வங்கியிடம் கடன் கேட்டுள்ளார். உலக வங்கியும் 600 கோடி டாலர் கடன் அளிக்க முன்வந்துள்ளது. 

ஆனால், கடன் அளிக்கும் முன் உலக வங்கி, பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பாகிஸ்தான் அரசு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது. பொருளாதார வளர்ச்சிக்காக, அதிகாரிகள் தங்களின் தேவையற்ற செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொகுசு ஓட்டலில் தங்காமல் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் தங்குகிறார் என்று டான் பத்திரிகை செயதி வெளியிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education



Thoothukudi Business Directory