» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் - டிரம்ப் அறிவிப்பு உறுதி

ஞாயிறு 7, ஜூலை 2019 9:50:10 PM (IST)

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம் ஒத்தி போட்டார். இந்த நிலையில், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்கி விடும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்தான் நாங்கள் அகற்றுகிறோம்’’ என குறிப்பிட்டார். ஆனால் புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த குழுக்கள் குறிப்பிடுகையில், ‘‘இந்த பொதுவான அச்சுறுத்தல் சமூகங்களுக்கும், அமெரிக்க பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும். ஏனென்றால் பெரியவர்கள் வேலைகளை இழக்கவும், குழந்தைகள் பள்ளிகளை தவிர்க்கும் சூழலும் உருவாகும்’’ என்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes



CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory