» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா - சவூதி அரேபியா குற்றச்சாட்டு!!

திங்கள் 17, ஜூன் 2019 11:52:40 AM (IST)ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்காவைத் தொடர்ந்து சவூதி அரேபியாவும் குற்றம் சாட்டியுள்ளது. 

இதுகுறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: முக்கியத்துவம் வாய்ந்த வளைகுடா கடல்வழித் தடத்தில், இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்களது நாட்டில் ஜப்பான் பிரதமர் ஷென்úஸா அபே மேற்கொண்ட நல்லெண்ணப் பயணத்தை துளியும் மதிக்காமல், ஈரான் அரசு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவருடைய சமாதான முயற்சிக்குப் பரிசாக ஈரான் நடத்திய அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு கப்பல்களில் ஒன்று ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.

போரை விரும்பவில்லை: ஈரானுடன் போரிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், எங்களது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை ஆகியவற்றுக்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம் என்றார் முகமது பின் சல்மான். ஓமன் வளைகுடா பகுதியில் 4 எண்ணெய்க் கப்பல்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி மர்மமான முறையில் தாக்குதலுக்குள்ளாகின. அவற்றில் 2 கப்பல்கள் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமானதாகும்.

இந்த நிலையில், அதே கடல் பகுதியில் ஜப்பானுக்குச் சொந்தமான ஓர் எண்ணெய்க் கப்பலும், நார்வேக்குச் சொந்தமான மற்றோர் எண்ணெய்க் கப்பலும் கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களை ஈரான்தான் நடத்தியது என அமெரிக்கா ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது சவூதி அரேபியாவும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

அமெரிக்காவே தாக்கியிருக்கலாம்: ஈரான் 

ஓமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் அலி லரிஜானி கூறியதாவது: எங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்த நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்காத சூழலில், இந்த மர்மத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2-ஆம் உலகப் போரின்போது ஜப்பானில் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக, அந்த நாடு அருகே அமெரிக்கா தங்கள் கப்பல்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education

Thoothukudi Business Directory