» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடம் தரக் கூடாது: இலங்கை அதிபர் சிறீசேனா பேச்சு

ஞாயிறு 9, ஜூன் 2019 10:01:19 PM (IST)

மீண்டும் ஒரு `பிரபாகரன்’ உருவாக இடம் தரக் கூடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர் பகுதியான முல்லைத் தீவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் சிறீசேனா பேசியதாவது: நாடு இப்போது பிளவுபட்டுக் கிடக்கிறது. மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பிளவுபட்டு நிற்கிறார்கள்.    ஒரு `முஸ்லிம் பிரபாகரன்’ உருவாக இடம் தரக் கூடாது. அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நாம் சிதறுண்டு பிளவுபட்டு நிற்போம் எனில், நாடு முழுவதுமே இழப்புக்கு உள்ளாக நேரிடும். இன்னொரு போர் வெடிக்கும். பெரும்பகுதி அரசியல்வாதிகள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்களே தவிர நாட்டைப் பற்றி கவலைப்படுவது இல்லை. நாம் பிளவுபட்டு நிற்பதுதான் நாட்டு முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனக்குப் புரிகிறது. அவற்றுக்குத் தீர்வு காணப்படு்ம். கடந்த காலத்தை தள்ளி வைத்துவிட்டு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். பயங்கரவாதம் வளர்வதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது. இவ்வாறு அதிபர் மைத்ரிபால சிறீசேனா பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education

Black Forest Cakes

New Shape Tailors
Thoothukudi Business Directory