» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு

திங்கள் 20, மே 2019 8:45:39 AM (IST)



ஈராக்கில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications

New Shape Tailors




Thoothukudi Business Directory