» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்!!

சனி 18, மே 2019 12:32:45 PM (IST)மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் ரயிலை இயக்கி ஜப்பானில் சோதனை வெற்றிகரமாக  நிகழ்த்தப்பட்டது. 

ஜப்பானில் அடுத்த தலைமுறைகான  அதிநவீன  ஷின்கென்சன் புல்லட் ரயிலின் தயாரிப்பினை அந்நாட்டு கிழக்கு ரயில்வே நிர்வாகம் முடித்துள்ளது. இந்த புல்லட் ரயிலின் முகப்பு பகுதி கூர்மையான மூக்கினை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகப்பு பகுதிக்கு 91 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6,40,16,68,000 )செலவிடப்பட்டுள்ளது.   இந்த அதிநவீன ரயில் ஒரு மணி நேரத்திற்கு 320 கி.மீ கடக்கக் கூடியதாகும். அதாவது 198 மையில் செல்லும். இந்த ரயில் நேற்று முன் தினம் ஜப்பானின் வடக்கு பகுதிகளான செண்டாய் முதல் மொரியோகா வரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  

இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், "முதன்முறையாக இந்த புல்லட் ரயிலின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இதர சோதனைகள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்படும்" என கூறினார். இந்த ஷின்கென்சன் ரயில்  2030-2031ம் ஆண்டு மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சேவைக்கு விடப்படும். ஜப்பானின் வடக்குப்பகுதியில் உள்ள ஹொக்காய்டோ தீவின் மிகப்பெரிய நகரமான சப்போரோ வரை மேலும் விரிவுப்படுத்தப்படும். இந்த அதிநவீன ரயில் சேவையை முன்கூட்டியே தொடங்க, பணிகள் விரைந்து முடிக்கப்படும். ஏஎல்எப்அ -எக்ஸ் ரக ஷின்கென்சன் புல்லட்  ரயில் உலகிலேயே  அதிவேகமாக இயங்கும் சக்கரம் கொண்ட புல்லட் ரயில் ஆகும் என  ஜப்பான் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape TailorsCSC Computer Education
Thoothukudi Business Directory