» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐரோப்பிய யூனியலிருந்து, இங்கிலாந்து வெளியேறும் பிராக்சிட் ஒப்பந்தம்: அடுத்த மாதம் வாக்கெடுப்பு

புதன் 15, மே 2019 5:04:54 PM (IST)

பிராக்சிட் ஒப்பந்தம் மீது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த மார்ச் மாதமே வெளியேற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டது. 

ஆனால், இங்கிலாந்து  பிரதமர் தெரசா மே-வின் பிராக்சிட் செயல்திட்ட வரைவுக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிராக்சிட் செயல்திட்டம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், ஒப்பந்தங்கள் எதுவுமின்றி, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று, வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், பிராக்சிட் ஒப்பந்தம்  மீதான வாக்கெடுப்பு, இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியலிருந்து, இங்கிலாந்து  வெளியேறும் பிராக்சிட் முடிவின் மீது, இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருப்பதால், நடைபெற இருக்கும் வாக்கெடுப்பின்போது, மீண்டும் தோல்வியடையும் சூழல் உருவாகியிருக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

New Shape Tailors

Black Forest Cakes




CSC Computer Education


Joseph Marketing



Thoothukudi Business Directory