» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது: வெள்ளை மாளிகை இப்தார் விருந்தில் டிரம்ப் நெகிழ்ச்சி!!

செவ்வாய் 14, மே 2019 5:31:18 PM (IST)



"உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் மாதம் புனிதமானது" என வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்த அதிபர் டிரம்ப் கூறினார்

இஸ்லாமியர்களின் நோன்பு காலமான ரம்ஜான் மாதத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது. அவ்வகையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவு இப்தார் விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது: அனைத்து வகையான மத நம்பிக்கைகளை கொண்ட மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழத்தகுந்த இடமாக அமெரிக்கா இருப்பதற்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். 

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இந்த ரம்ஜான் மாதம் புனிதமானது. தான, தர்மங்கள் செய்யவும் சக மக்களுக்கு சேவை செய்யவும் அண்டை வீட்டார், சமூகத்தினர் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கவும் ரம்ஜான் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக உள்ளது.  நம்பிக்கை, சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இப்தார் விருந்தில் நாம் ஒன்றிணைகிறோம். நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், இலங்கை, கலிபோர்னியா, பிட்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியான கிறிஸ்தவ, யூத மக்களுக்கும் இதர கடவுளின் பிள்ளைகளின் நினைவுகளால் இந்த வேளையில் நமது இதயம் வேதனைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory