» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் இரு பிரிவினர் இடையே மோதல் - பதற்றம் : ஊரடங்கு உத்தரவு அமல்

ஞாயிறு 12, மே 2019 8:21:10 PM (IST)

இலங்கையின் சிலாபாத்தில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத்தின் போது இலங்கை தேவாலயங்களில்  இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 250 பேர் மாண்டுபோயினர், பலர் பலத்த காயமடைந்தனர். அதனால், தற்போது அங்குபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் சிலாபாத்தில் இஸ்லாமியர்களின் மசூதி மற்றும் சில கடைகள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து இருதரப்பு இடையே பதற்றம் காணப்பட்டது. உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கத்தோலிக்க சர்ச்சுகளின் கார்டினல் மால்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கோரிக்கை செய்தியில், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இஸ்லாமிய சகோதரர்களைக் காயப்படுத்தக்கூடாது. அவர்கள் நம் சகோதரர்கள், அவர்கள் நமது மத கலாச்சாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். 

அவர்களைத் தொந்தரவு செய்வதை தவிர்ப்பதுடன், இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு மற்றும் நல்ல உறவுகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்  எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 258 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இலங்கை அதிபர் சிறிசேனா நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, இஸ்லாமிய மக்களை தொடர்ந்து சந்தேகத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory