» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 4:22:42 PM (IST)



கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பழிவாங்கவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 310 பேர் மரணமடைந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 24 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  

கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது, அடிப்படைவாத சிந்தனை கொண்ட ஒருவன் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொழும்புவில் அந்நாட்டின் பாரா மன்றத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, "இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கையில் தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Anbu Communications



Thoothukudi Business Directory