» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் 40 பேர் பலி? 300 பேர் காயம் : ஈஸ்டர் திருநாளில் பயங்கரம்!

ஞாயிறு 21, ஏப்ரல் 2019 11:29:00 AM (IST)இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 40 க்கும் மேற்பட்டோர் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர்ப்பலி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. 

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கொச்சிக்கடை, நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் ஆண்டு வெடித்தது. இதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. மேலும் பல ஆலயங்கள் மற்றும் ஓட்டலில் குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் யாரும் உறுதி செய்ய முடியவில்லை. சிறிது காலம் அமைதியாக இருந்த இலங்கையில் தற்போது வன்முறை தலைதூக்கியுள்ளது கவலை அளிப்பதாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications
Nalam PasumaiyagamThoothukudi Business Directory