» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேஸ்புக் சி.இ.ஓ.பாதுகாப்பிற்காக ரூ.156 கோடி செலவு: இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிப்பு

சனி 13, ஏப்ரல் 2019 4:03:51 PM (IST)

கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக 1 டாலரை அடிப்படை ஊதியமாக பெற்று வரும் ஜூக்கர் பெர்க்கின், பிற செலவினங்களுக்காக மட்டும், இந்திய மதிப்பில் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பகுதி ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு காரணங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அவர் பயணம் செய்யும் தனி விமானங்களுக்காக மட்டும் சுமார் 18 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்படுவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த ஒழுங்குமுறை அறிக்கையில் பேஸ்புக் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 62 கோடி ரூபாயாக இருந்த இந்த செலவினங்கள், 2018ம் ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications


New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory