» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புல்வாமா தாக்குல் எதிரொலி: சவுதி இளவரசர் தயக்கம்? நிதியுதவி பெற பாகிஸ்தானுக்கு சிக்கல்!!

சனி 16, பிப்ரவரி 2019 5:41:48 PM (IST)புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் செல்ல சவுதி இளவரசர் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சவுதியிடம் இருந்து பல கோடி ரூபாய் உதவி பெறும் வாய்ப்பை இழக்கும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தார். சவுதி இளவரசரின் இந்த பாகிஸ்தான் பயணத்தில் பல கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கவதுடன், 15 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உடன்படிக்கை செய்யவும் திட்டமிடப்பட்டு இருந்தது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான், சவுதி இளவரசரின் வருகைக்காக ஆவலுடன் காத்து இருந்தது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவினர் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெய்ஷ் - இ- முகமது உட்பட தீவிரவாத இயக்கங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில் பாகிஸ்தான் செல்வதால் தர்மசங்கடமான சூழல் ஏற்படும் எனக் கருதி தனது பயணத்தை சவுதி இளவரசர் சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

ஆனால் இன்னமும் நிலைமை சீரடையவில்லை. சவுதி இளவரசர் நாளை வரலாம் என எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. சவுதி இளவரசர் இந்தியாவுக்கும் வருகை தர திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் பயணத்தால் இந்தியாவுடன் கசப்புணர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சவுதி இளவரசர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


New Shape Tailors


Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory