» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ரஷ்யா

வெள்ளி 15, பிப்ரவரி 2019 3:58:48 PM (IST)

புல்வமா பயங்ரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என  ரஷ்யா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 45 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதின் கூறுகையில், "தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூர குற்றத்திற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


New Shape Tailors


Anbu Communications



Thoothukudi Business Directory