» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் செல்வதை அமெரிக்கர்கள் கட்டாயமாக தவிர்க்க வேண்டும்: டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

வெள்ளி 15, பிப்ரவரி 2019 12:24:07 PM (IST)

பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Joseph Marketing

CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors




Thoothukudi Business Directory