» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெள்ளி 15, பிப்ரவரி 2019 11:01:55 AM (IST)பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , " பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும் அவர்களுக்கு புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இந்த தாக்குதல் மூலம் வலுப்படவே செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

New Shape TailorsBlack Forest Cakes

Joseph Marketing

Nalam PasumaiyagamThoothukudi Business Directory