» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது ஏற்காதது ஏன்? - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி

வியாழன் 14, பிப்ரவரி 2019 3:37:53 PM (IST)

"கடனை திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கூறியபோது அதனை ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்கு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை?" என லண்டன்  தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக் குத் தப்பிய விஜய் மல்லையா மீது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன. அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துகளை முடக்கியது. தப்பி யோடிய பொருளாதார குற்றவாளி மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக இங்கி லாந்து அரசுடன் இந்திய அரசு பல் வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன்பேரில் லண்ட னில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது உத்தரவும் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16வது மக்களவையின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி தனது உரையில் விஜய் மல்லையாவின் பெயரை குறிப்பிடாமல் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விஜய் மல்லையா தனது ட்வீ்ட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்திய மீடியாக்களில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நிறைவுரையாற்றியது எனது கவனத்திற்கும் வந்தது. அவர் ஒரு சிறந்த பேச்சாளர் தான் சந்தேகம் இல்லை. அவர் தனது உரையில் 9000 கோடி ரூபாயை கொண்டு ஓடிவிட்டதாக பெயரை குறிப்பிடாமல் பேசினார். ஊடகங்கள் எனது பெயரைத்தான் அதிலும் இழுத்துவிட்டன.நான் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. அப்படியானால், நீதிமன்றங்கள் முன்பாக ரூ.14000 கோடி சொத்துக்கள் இருப்பதாக எப்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? உடகங்கள் தவறான தகவலை அளிக்கின்றன.

கடனை திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கூறியபோது அதனை ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்கு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை. நான் டேபிளில் தூக்கி வைத்த பிறகும் அந்த பணத்தை திரும்ப பெற வங்கிகளுக்கு அறிவுறுத்தவில்லை. அப்படி ஏற்றுக்கொண்டால், கிங்பிஷருக்கு கொடுத்த முழு கடனையும் மீட்டுவிட்ட பெருமையை பிரதமர் பெற்றுக்கொள்ளலாமே. இவ்வாறு விஜய் மல்லையா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 15, 2019 - 01:05:56 PM | Posted IP 162.1*****

கிழவன் மோடியின் நண்பன் கார்பொரேட் பணக்காரரின் நண்பன் .. எப்படி கைது பண்ணுவாங்க ???

தமிழன்-Feb 14, 2019 - 06:19:56 PM | Posted IP 162.1*****

உன்ன வச்சு தான்பா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கேன் ... மல்லையா த்விட்டேர் பயன்படுத்த தடை வந்துரும்.. கவனம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

New Shape Tailors


CSC Computer Education
Thoothukudi Business Directory