» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அபுதாபி நீதிமன்றங்களில் 3ஆவது அலுவல் மொழியாக ஹிந்தி சேர்ப்பு : நீதித்துறை அறிவிப்பு

திங்கள் 11, பிப்ரவரி 2019 12:31:20 PM (IST)



அபுதாபி நீதிமன்றங்களில் 3ஆவது அலுவல் மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.  இதைத்தொடர்ந்து அனைத்து சிவில் மற்றும் வர்த்தகம் தொடர்புடைய வழக்குகளில் ஆவணங்கள் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் முதல் ஆங்கில மொழியிலும் வழங்கப்படுகிறது. மேலும் அமீரகத்தில் ஹிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். 

அவர்கள் எளிதில் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், தங்களது வழக்குகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்கும் வகையிலும் ஹிந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரபி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 3ஆவது மொழியாக ஹிந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இணையதளம் மூலமும் ஹிந்தி மொழியில் கருத்துக்களை கூறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஹிந்தி மொழி பேசக்கூடிய தொழிலாளர்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவித்து தீர்வு காண உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Joseph Marketing

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory