» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன பொருளாதாரத்தில் 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி: சர்வதேச அளவில் எதிரொலிக்குமா?

திங்கள் 21, ஜனவரி 2019 4:37:34 PM (IST)

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 

உலகில்  பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளில்  சீனாவும் ஒன்று. உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவின் பங்கு முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 

இதுதொடர்பாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவானது, தொடர்ந்து மெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டதன் விளைவாக சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையானது சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes


Anbu Communications

New Shape Tailors


CSC Computer EducationThoothukudi Business Directory