» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அரசு அலுவலகங்கள் முடக்கம்: ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு பீட்சா வழங்கினார் புஷ்

திங்கள் 21, ஜனவரி 2019 9:13:47 AM (IST)



அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் முடக்கம் காரணமாக, ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு முன்னாள் அதிபர் புஷ் பீட்சா வழங்கினார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள். 

இந்நிலையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ரகசிய சேவை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ‘பீட்சா’ வாங்கி கொடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரே நேரில் சென்று ஒவ்வொருவருக்கும் ‘பீட்சா’ வை வழங்கினார். இது தொடர்பாக ஜார்ஜ் புஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘பீட்சா’ வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "நமக்கு ஆதரவு அளிக்கும் நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Joseph Marketing


Anbu Communications




Thoothukudi Business Directory