» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்

புதன் 16, ஜனவரி 2019 8:21:40 PM (IST)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், அரசியல் ரீதியாக பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 பேர் வாக்களித்தனர். ஆதரவாக வெறும் 202 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். பிரெக்சிட் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பல மாதங்களாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். 

தற்போது அந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காததால், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுமேயானால், வரும் மார்ச் 29ம் தேதியுடன் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் தெரெசா மேவுக்கு எதிராக, அவரது கட்சியினர் பலரும் வாக்களித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு கட்சிகளுக்குள்தான் வாக்குவாதம் நடக்குமே தவிர, ஒரே கட்சிக்குள் கலகம் நடக்காது. 

ஆனால், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நடந்த செயல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து, எதிர்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளாக பிரெக்சிட் ஒப்பந்தத்துக்காக பேசி வருகிறார் தெரசா மே. ஆனால், அவரது எண்ணம் நிறைவேறாது” என்றார். முன்னதாக ஒப்பந்தத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய தெரசா மே, "நாம் வாக்களிக்கப் போவது இந்தத் தலைமுறையின் மிக முக்கிய முடிவாக இருக்கும். என்னுடைய பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவளியுங்கள். இல்லையென்றால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory